இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய இராணுவத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவுரீதியிலான பேச்சுவார்த்தை, பயிற்சி முகாம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய விடயங்களுக்காக இந்தக் குழு விஜயம் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lanka Newsweek © 2026